முக்கிய செய்திகள்

Wednesday, November 9, 2011

மூன்று வகை மனிதர்கள்நான் என் வாழ்வில் கண்ட மனிதர்களை மூன்று வகையாகப் பாகுபடுத்தி உணர்ந்திருக்கிறேன்..

இவ்வகைப்பாடுகளுள் நான் என்றும் மூன்றாம் வகை மனிதனாகவே 
இருக்க முயற்சித்து வருகிறேன்..
இதோ என் வகைப்பாடு..சிந்திப்போர் 
செயல்படுவோர்
சிந்தித்துச் செயல்படுவோர்!

அறிவுடையோர்
ஆற்றலுடையோர்
அறிவை ஆற்றலுடன் வெளிப்படுத்துவோர்!

சிரிக்காதவர்
சிரிப்பவர்
சிரிக்கவைப்பவர்!

பேசாதவர்
பேசுபவர்
பேசவைப்பவர்!

மாறாதவர்
மாறுபவர்
மாற்றுபவர்!

கருவிகளை நம்புவோர்
கடவுளை நம்புவோர்
தன்னை நம்புவோர்!

வாழ்க்கையைத் தொலைத்தவர்
வாழ்க்கையைத் தேடுபவர்
வாழப் பிறந்தவர்!

காலத்தின் பின்னால் ஓடுபவர்
காலத்தின் முன்னல் ஓடுபவர்
காலத்துடன் செல்பவர்!

வாய்ப்பில்லை என வாடுவோர்
வாய்ப்புகளைத் தேடுவோர்
வாய்ப்புகளை உருவாக்குவோர்!


வரலாறு பேசுவோர்
வரலாறு படிப்போர்
வரலாறு படைப்போர்!

துடிப்போர்
எடுப்போர்
கொடுப்போர்!

பிறரைப் பற்றியே பேசுவோர்
தன்னைப் பற்றியே பேசுவோர்
தன்னைப் பற்றிப் பேச வைப்பவர்!

தவறு செய்வோர்
தண்டனை தருவோர்
தவறுகளையும் தவறின்றிச் செய்வோர்!

அறிவுரை கேட்போர்
அறிவுரை சொல்வோர்
அதன் படி வாழ்வோர்!

1 comment: