- பாகம் -1 http://thanjavursiva.blogspot.com/2012/06/1.html
- பாகம் -2 http://thanjavursiva.blogspot.com/2012/06/2.html
- பாகம் -3 http://thanjavursiva.blogspot.com/2012/06/3.html
- பாகம் -4 http://thanjavursiva.blogspot.com/2012/06/4.html
- பாகம் -5 http://thanjavursiva.blogspot.com/2012/06/5.html
- பாகம் -6 http://thanjavursiva.blogspot.com/2012/06/6.html
- பாகம் -7 http://thanjavursiva.blogspot.com/2012/06/7.html
- பாகம் -8 http://thanjavursiva.blogspot.com/2012/07/8.html
- பாகம் -9 http://thanjavursiva.blogspot.com/2012/07/9.html
புனித ரமலான் நோன்பு மாதம் :
இஸ்லாம் மார்கத்தின் மூன்று முக்கிய கடமைகள் உண்டு. ஒன்று நாள் தவறாத ஐந்து வேளை பிரார்த்தனை, இரண்டாவது, வாழ்வின் ஒரு முறையாவது மேற் கொள்ள வேண்டிய மெக்காவிற்கான புனித பயணம், அடுத்தது ரமலான் நோன்பு.
கடுமையான வெயிலிலும் தொழிலாளர்கள் முதல் உயர்நிலைப் பணியாளர்கள் இறைக்கட்டளையான நோன்பை கடைப்பிடித்து வருவது எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தும் . கடுமையான வெயிலில் தண்ணீர் கூட அருந்தாமல் எப்படி சுமார் 14 மணி நேரம் இருக்க முடிகிறது என்பதனை நினைக்கும் போது மிகவும் ஆச்சரியப்பட வைக்கிறது.
புனித மாதமாய் வரையறுக்கப்பட்டு, கடுமையான கோட்பாடுகள் வரையறுக்கப்பட்டு உபவாசம், வருமானத்தில் ஒரு பகுதி தானம் செய்தல் என உள்ள உடல் தூய்மை செய்யும் மாதம். சூரிய காலெண்டர் பின்பற்றுவதால், ரமலான் மாதத்தின் தொடக்கம் நமக்கு முன் கூட்டியே தெரியாது. சவுதி அரேபியாவில் பிறை தெரிகிறதா என்று சொன்னதும் தான் நமக்கு தெரியும். இஸ்லாம் இங்கு அரசு மதமானதால் ரமலான் கூடுதல் கண்டிப்புடன் கடை பிடிக்கப்படும்.
புனித மாதமாய் வரையறுக்கப்பட்டு, கடுமையான கோட்பாடுகள் வரையறுக்கப்பட்டு உபவாசம், வருமானத்தில் ஒரு பகுதி தானம் செய்தல் என உள்ள உடல் தூய்மை செய்யும் மாதம். சூரிய காலெண்டர் பின்பற்றுவதால், ரமலான் மாதத்தின் தொடக்கம் நமக்கு முன் கூட்டியே தெரியாது. சவுதி அரேபியாவில் பிறை தெரிகிறதா என்று சொன்னதும் தான் நமக்கு தெரியும். இஸ்லாம் இங்கு அரசு மதமானதால் ரமலான் கூடுதல் கண்டிப்புடன் கடை பிடிக்கப்படும்.
சூரிய உதயம் தொடங்கி அஸ்தமனம் வரை பொது இடங்களில் வைத்து உண்ணவோ, குளிர் மற்றும் சூடான பானங்கள் குடிக்கவோ தடை, அவர்களுக்கும், பொது இடங்களில் நமக்கும். வீட்டினுள் வைத்து மட்டுமே உண்ண முடியும். இந்த சட்டத்தை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர்.....இஸ்லாம் அல்லாதவர் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர் பாவம், நோன்பு நேரத்தில் சிகரெட் சீக்ரெட் ஆகும்.
பன்னிரெண்டு மணி நேரம் உண்ணாத வயிறை முதலில் தண்ணீர், பழ ரசம் குடித்தும், பின்னர் பேரிச்சை, திராட்சை பழங்களை உண்டு, பின்னர் கஞ்சி போல உண்பதும் ஆன நோன்பு திறக்கும் விருந்தின் பெயர் இப்தார்.
பணி நேரம் 12-15 மணி நேரத்திலிருந்து 6-8 மணி நேரமாக குறைக்கப்படும். ரமலான் நோன்பிருக்கும் முஸ்லீம் நண்பர்களுக்கு 6 மணி நேர பணி நேரமும், நோன்பு இருக்காத பிற மதத்தினர்களுக்கு 8 மணி நேர பணிநேரமும் நிர்ணயம் செய்யப்படும்.
விடிகாலையில் நான்கு மணிக்கு இறுதியாய் உண்ணவோ, குடிக்கவோ செய்யலாம், அதன் பின் மாலை சூரிய மறைவுக்கு பின் தான். காலை நோன்பு திறந்தவுடன், ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டு விடும்..... பின், மாலை நோன்பு முடிந்த உடன் ஹோட்டல்கள் அனைத்தும் திறக்கப்படும். இடைப்பட்ட நேரத்தில், மதிய உணவு பார்சல் வசதி சில ஹோட்டல்கள் செய்து தரும். ஹோட்டல்களில் சாப்பிட முடியாது..... பார்சல் தருவதென்றால் ஓகே என்பார்கள்...... நோன்பு இருக்காதவர், அந்த பார்சல் வசதியை உபயோக படுத்தி கொள்ளலாம்..
இந்த ரம்ஜான் நேரத்து, மதிய உணவு சேவையை செய்ய விரும்பும் ஹோட்டல்கள் தனியாக ஒரு சிறப்பு லைசன்ஸ் துபாய் முனிசிபாலிட்டியிடம் இருந்து வாங்க வேண்டும், இது, அந்த ரம்ஜான் மாதம் முழுதுக்குமான சிறப்பு லைசன்ஸ் தொகை..... ஆனால் ஒன்று, இந்த சிறப்பு லைசன்ஸ் இல்லாமல், மதிய உணவு சேவையை யாரும் செய்ய முடியாது...... அதிகாரிகள், திடீரென்று உணவகங்களில் வந்து சோதனை செய்வார்கள்....... பிடிபட்டால், பெரிய தொகை அபராதமாக செலுத்த வேண்டி இருக்கும்.
ரமலான் மாதத்தை எல்லோரும் ஆவலுடன் எதிர் பார்க்கும் இன்னொரு விசயம் தொடர்ச்சியாய் கிடைக்கும் விடுமுறை தான். ஆரம்பிக்கும் தேதி நிச்சயம் இல்லாததால், விடுமுறை என்று தொடங்கும் என்பதும் லாட்டரி சீட்டு போலத்தான். வார இறுதி விடுமுறையோடு சேர்த்து இத்தனை நாள் என்று ஏக்கத்தில் ஏங்கும் உழைக்கும் வர்க்கம்.
இங்கு தொழிளார்கள் முதல் மேலாளர்கள் வரை அனைவருமே மூன்று மாதம் முதலே எங்கு செல்லலாம் என்ற திட்டம் இருக்கும் .....இப்படிதான் போன வருஷம் நினைச்சோம் முடியல !!!
ஆனா இந்ததடவை எப்படியும் போய்டுவோமடானு ....கீழ் தட்டு தொழிலாளர்கள் நண்பர்களையும் உறவினர்களையும் காணவும் .....நடுத்தர வர்கத்தினர் பீச் ,துபாய் மால் ,அலைன் ஜூ ,புஜைறாஹ் பீச் ,என்று நண்பர்கள் கூட்டத்திடனும்.......... ,மேல் தட்டு வர்கத்தினர் ஓமன் ,மஸ்கட் ,சலாலாஹ் ,இந்தியான்னு அவர்களது பொருளாதார நிலமைகேற்ப திட்டம் இருக்கும் , இதல்லாம் நடக்குமான்னு கேட்டா ? வீங்குன விவாதம் விரிஞ்சு போச்சு (இதுவும் புதுசா!!!).
இது எதுலயும் சேர்க்காத குடி வர்க்கம் ஒன்னு இருக்கு !!!!! இது குடி ,சாப்பாடு ,தூக்கம்னு நாலு சுவர்களுக்குள் முடிக்கும் கூட்டம் .....கேட்டா குடும்ப நினைப்புனு சொல்லும் ....
(ஆட தெரியாதவனுக்கு தெரு கோணலாம் )
விடுமுறை நிச்சயம் ஒரு பயணத்தின் துணை கொண்டு இனிமையாய் நகரும். முடிந்த பின் அடுத்த வருடம் இப்படி செய்ய வேண்டும் என்று இப்போதே திட்டமிடும்.
தொடரும் ............
இஸ்லாமிய நண்பர்களுக்கும் !!பதிவர்களுக்கும் !!இந்த புனித ரமலான் மாதம் இனிதே அமைய வேண்டுகிறேன் ......
இஸ்லாம் மார்கத்தின் மூன்று முக்கிய கடமைகள் ////// 5 முக்கிய கடமைகள்....
ReplyDelete1.கலிமா.2.தொழுகை 3.நோன்பு 4.ஜகாத்(தர்மம்)... 5.ஹஜ்....