முக்கிய செய்திகள்

Wednesday, August 8, 2012

சாபமா, வரமா துபாய் -பாகம் -12





  1. பாகம் -1   http://thanjavursiva.blogspot.com/2012/06/1.html
  2. பாகம் -2   http://thanjavursiva.blogspot.com/2012/06/2.html
  3. பாகம் -3   http://thanjavursiva.blogspot.com/2012/06/3.html 
  4. பாகம் -4   http://thanjavursiva.blogspot.com/2012/06/4.html
  5. பாகம் -5   http://thanjavursiva.blogspot.com/2012/06/5.html
  6. பாகம் -6   http://thanjavursiva.blogspot.com/2012/06/6.html
  7. பாகம் -7   http://thanjavursiva.blogspot.com/2012/06/7.html
  8. பாகம் -8   http://thanjavursiva.blogspot.com/2012/07/8.html
  9. பாகம் -9   http://thanjavursiva.blogspot.com/2012/07/9.html
  10. பாகம் -10   http://thanjavursiva.blogspot.com/2012/07/10.html
  11. பாகம் -11   http://thanjavursiva.blogspot.com/2012/08/11.html



துபாய் ஷாப்பிங் திருவிழா !!!!


உள்ளூர் வர்த்தகத்தை  உசர வைக்க 1996 வருசம் சும்மா திருவிழான்னு தொடங்குனது, இன்னைக்கு ரொம்ப பெரிசா இந்த வட்டாரத்தையே திரும்பி பார்க்க வைக்குது. ஜனவரி 15 தொடங்கி ஃபிப்ரவரி 15 வரை ஒரு மாத கூத்து தான், உள்ளுர் சராசரிவாதியை போக்குவரத்து நெரிசல் என்ற பெயரில் பதம் பார்க்கும். இத்தனைக்கும் 1 லட்சம் பார்வையாளர்கள் முதல் நாள்லயும் மொத்தமா 35 லட்சம் பேர் ஒரு மாசத்திலயும்னு அவங்க பெருமையா கணக்கு சொல்லும் போது நமட்டு சிரிப்பு சிரிச்சு, "எங்க ஊர் தீவுத்திடல்"ல இத விட பெருசா பண்ணிட்டோம்டா என்று நினைக்கும் நம் நினைப்பே, அடுத்த தகவலில் தடுக்கி விழும். இந்த திருவிழாவில 100 கோடி ரூவாய்ல சாமான் வாங்கியிருக்காக. நம்முர்ல வெறும் பஜ்ஜி, போண்டா சேல்ஸ்தேன்....

உள்ள நுழைய கட்டணம் 10 திராம், நம்மூர் கணக்கில 150 ரூபா – ஒரு ஆளுக்குத்தான். சரியாத்தான் நினைச்சீக. கொஞ்சம் ஜாஸ்தியாச்சேன்னு நினைச்சீங்கன்னா, இதையும் கேட்டுகோங்க, இந்த சமயத்துல கவர்மெண்ட்டே லெக்ஸஸ் கார் அதிர்ஷ்ட குலுக்கல் ஒண்ண நடத்துது. ஒரு டிக்கட்டோட வெல வெறும் 250 திராம் தான்... அதாவது, நம்மூர் காசுல ரூ.3250 தேன்... ஒவ்வொரு 5000 டிக்கட்டுக்கு ஒரு குலுக்கல்.
நம்ம டிக்கட்டோட நம்பர் குலுக்கிப் போட்டு, அதில நம*க்கு அதிர்ஷ்டம் மட்டும் இருந்துச்சுன்னா, போகும் போது லெக்சஸ் கார் கொண்டு போக வாய்ப்பு இருக்கு. பின்ன என்னங்க, ஒவ்வொரு 5000 டிக்கெட்டுக்கும் ஒரு குலுக்கல், தினத்துக்கும் இரண்டு லெக்சஸ் கார்ங்கிறப்போ கிடைக்க நல்ல சான்ஸ் இருக்கில்லையா. அந்த நப்பாசையில நம்மாளும் போவாய்ங்க. கிட்ட போயி கேட்டீங்கன்னா, மன்னன் பட "கவுண்டமணி" ஸ்டைல்ல ‘உள்ள வாங்கி வெளியில விக்க வேண்டியது தான், அத யாருப்பா அசிங்கமா ரோட்டுல* எல்லாம் ஓட்டுவாய்ங்கம்பான்’

இது மட்டும் இல்ல. பத்தாயிரத்துக்கு தங்கம் வாங்கினா, பெட்ரோல் பங்க்ல போயி பெட்ரோல் இல்லாம 50 ரூபாய்க்கு மேலா சாமான் வாங்கினா (மேலயும் கீழயும் பார்க்காதீங்க..... ஆயில், ரேடியேட்டர் தண்ணீ, குழாய்புட்டு, கேக், பிஸ்கட், ஜூஸ் இந்த மாதிரி இத்யாதி இத்யாதி சாமான்கள்) உங்களுக்கு கூப்பன் தான், குலுக்கல் தான், குப்புன்னு பரிசு மழைதான். தினத்துக்கு நிசான் கார், 1 கிலோ தங்கம், ஒன்றரை கோடி ரூபான்னு பூரா வாய் ஜொல்லு விடுறா மாதிரி பரிசுதேன்.

இங்கனதான்னு இல்ல, துபாய் முழுக்க இந்த பரிசு கலாச்சாரம் அதிகம் தான். உள்ளூர் வங்கிகள் கூட டெபாஸிட் பெற்றுக் கொண்டு மாதம் ஒரு முறை காலாண்டுக்கு ஒரு முறை எனும் விதமாய் குலுக்கி பரிசு தருவார். எமிரேட்ஸ் போஸ்ட் எனும் நிறுவனம் கூட 1 கோடி கனவு எனும் திட்ட்த்தின் கீழ்அடித்தட்டு மக்களுக்கு நம்பிக்கை விதை விதைப்பார். என்னடா தூக்கி பிடிச்சு பேசுறீங்களே, இதுவும் ஒரு லாட்டரி சீட்டு போலத்தானே, என்பவருக்கு. இல்லைங்க, இது சிறு சேமிப்பு. நீங்கள் வாங்கும் ஒவ்வொரு சேமிப்பு பத்திரத்தின் குலுக்கலே இந்த அதிரடி பரிசு.

வருசத்துக்கு ஒரு தடவை ஷாப்பிங் பெஸ்டிவல், நடக்குறதால நடுவில ‘துபாய் சம்மர் சர்பிரைஸ்’ நடக்கும். இதுவும் அது போலத்தான். கேளிக்கைகள், கொண்டாட்டம் எல்லாம் தூள் பறக்கும்.


ரெண்டுக்கு என்ன வித்தியாசம்னா, துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் குளிர் காலத்தில் நடக்கும்... துபாய் சம்மர் சர்ப்ரைஸஸ் என்பது கோடை காலத்தில் நடக்கும்... பின்னே, வெயில்காலத்துல ஊருக்குள்ள ஆளுங்கள எப்படி கூப்பிடறது... இல்ல..எவன் இந்த சூட்டுக்கு உள்ள வருவான்?

வறுமையின் நிறம் சிகப்பு திரைப்படத்தில் கமல்ஹாசன் ஒரு இண்டெர்வியூ போவார். ஒரு இந்திய மாகாணத்தின் முதல் மந்திரி யார், என கோட்டு(டி)க்கார மானேஜர் கேட்க. நேற்றா! இன்றா!! நாளையா!!! என்று புரட்சித்தலைவர் படப் பெயரை எதிர் கேள்வியாய் இங்கிலீஷில் கேட்பார். இடைவேளை விடுவார்கள், பாப்கார்ன் வாங்க நாமும் ஒதுங்குவோம்.

இதே மாதிரி பதில் சொல்ல தோதுவாய் ஒரு கேள்வி. உலகத்தின் உயரமான கட்டிடம் எது என கேட்டால் நீங்கள் விவரமானவர்கள் சரியாக ஊகித்து வீட்டீர்களே. நேற்றா! இன்றா!! நாளையா!!!. உலகின் உயரமான கட்டிடம் எனும் அந்தஸ்தை இன்று துபாய் தனக்கு சொந்தம் ஆக்கி இருக்கிறது. கட்டிட்த்தின் பெயர் புர்ஜ் துபாய்.

சரி உயரம் என்ன?? உஷ்... சொல்ல மாட்டோம் ....ஏங்க??? என்று நாம் கேட்டால், அவர்கள் சொல்கிறார்கள்... நாங்களும் இதமா சொல்லப் போயி வேற எதாவது ஊரில இதை விட உசரமா கட்டிப்புட்டா, நாங்க என்ன செய்யுறது. தென் கொரியா காண்டிராக்டர், சாம்சங் கம்பெனிக்கு, அவர்தாங்க பில்டிங் கட்டுறவர், அவருக்காவது தெரியும் என நம்புகிறோம்.

 உசரமா ஒரே ஒரு கட்டிடம் கட்டாம, அத ஒரு ஊரு மாதிரி கட்டுறது நம்ம துபாய் துணிச்சல். இந்த ஊரு கட்ட போட்ட திட்டம் எவ்வளவு. அதிகமில்லை ஜெண்டில்மேன் சுமார் 9,000 கோடி.



(இன்னும் கொஞ்சமா இருக்கு....)


4 comments:

  1. பல தகவல்கள் பிரமிக்க வைக்கின்றன...

    நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. செம இன்ட்ரஸ்டிங்கான ஸ்கிரிப்ட்... சீக்கிரமே இதை ஒரு புத்தகமாகவும் வெளியிட முயற்சி செய்யுங்கள்...

    ReplyDelete
  3. வரிகளுக்கிடையே இன்னும் கொஞ்சம் இடைவெளி இருந்தா படிக்கறதுக்கு சௌகரியமா இருக்குட்னு நினைக்கிறேன். அந்த டெக்னிக் தெரியோணும்னா, கேளுங்க, சொல்லித்தாறேன்.

    ReplyDelete