முக்கிய செய்திகள்

Thursday, August 23, 2012

சாபமா, வரமா துபாய் -பாகம் -13


  1. பாகம் -1   http://thanjavursiva.blogspot.com/2012/06/1.html
  2. பாகம் -2   http://thanjavursiva.blogspot.com/2012/06/2.html
  3. பாகம் -3   http://thanjavursiva.blogspot.com/2012/06/3.html 
  4. பாகம் -4   http://thanjavursiva.blogspot.com/2012/06/4.html
  5. பாகம் -5   http://thanjavursiva.blogspot.com/2012/06/5.html
  6. பாகம் -6   http://thanjavursiva.blogspot.com/2012/06/6.html
  7. பாகம் -7   http://thanjavursiva.blogspot.com/2012/06/7.html
  8. பாகம் -8   http://thanjavursiva.blogspot.com/2012/07/8.html
  9. பாகம் -9   http://thanjavursiva.blogspot.com/2012/07/9.html
  10. பாகம் -10   http://thanjavursiva.blogspot.com/2012/07/10.html
  11. பாகம் -11   http://thanjavursiva.blogspot.com/2012/08/11.html
  12. பாகம் -12  http://thanjavursiva.blogspot.com/2012/08/12.html


நவ நாகரீக வர்த்தக மையமும், நட்சத்திர ஹோட்டல்களும் அடக்கிய சொர்க்க புரியே இந்த டவுன் டவுண். பின்னே 30,000 வர்த்தக மற்றும் குடியிருப்பு வசதிகளும் உலகின் மிக பெரிய ஷாப்பிங் மால், பெயர் துபாய் மால் இதில் அடக்கம். இந்த கடை திறந்து இப்போ நாலு  வருசம் ஆச்சு. இதில் உசரமான ஒரே கட்டிடத்துக்கு மாத்திரம் 4000 கோடி.


போற போக்கில ஒரு உபரித் தகவல். துபாயின் கட்டிட கட்டுமானத்தை பற்றி புரிந்து கொள்ள இந்த தகவல் உதவும் என நம்புகிறோம். இந்த உலகத்தில் உள்ள கிரேன் அதாங்க, மும்பை எக்ஸ்பிரஸ்ல நம்ம கமல்ஹாசன் ஏறி குரங்கு கூட விளையாடுவாரே, அந்த இரும்பு ஏணி தான். அதில 35% இங்கே துபாய்ல தான் குந்திகிட்டு இருக்கு. உலக விகித்தில் இது ரொம்ப ஜாஸ்தி, ஏன்யா 35% கிரேன் இங்க இருக்குன்னா அத்தன கட்டிட வேலை இங்க தான் நடக்குதுன்னு அர்த்தம்...

உசரமான கட்டிடம் கட்டுறோம் என சவுண்டு விட்ட நேரத்தில் இருந்து நாங்களும் பார்த்துக் கிட்டே இருக்கோம். கிரேன் வருது, ஆள் வருது, அம்பு வருது, அப்பு வருது, குப்பு வருது.. ஆனா பில்டிங் மட்டும் காணேம், என்னாடா வருசம் ஒண்ணாச்சே, ஒரு மாடி கூட கட்டலயேன்னு பார்த்தா சோக்கா சொன்னாரு துரை ஒரு கதை. 100 மாடி, 150 மாடின்னு கட்டுறது எப்படி, பூரா காங்கீரீட்டில தூண் எழுப்பி, சும்மான்னாக்க ஊடு செங்கல் வைச்சு சில சுவர், கண்ணாடில மீதி சுவர வைச்சி பூசாம பெயிண்ட் அடிக்காம, முடிக்கிறது தான் இந்த முறை. அதனால பில்டிங் நிக்கிறதுக்காக பூமிக்கு மேல உள்ள மாதிரி பூமிக்கு கீழேயும் ஆழமா பவுண்டேஷன் இருக்குதாம். சுருக்காச் சொன்னா 100 மாடில கட்டிடம் கட்ட 10 மாடி ஆழத்துக்கு குழி தோண்டி, பவுண்டேஷன் போட்டு அப்புறம் தூக்கணும் பில்டிங்க.

அதனால தான் பூமிக்கு கீழே பள்ளம் தோண்டுறது, நிரப்புறதுண்ணு நேரம் ஆனாலும் பூமிக்கு மேல சுளுவா அஞ்சு மாடி எட்டு மாடின்னு ஒரு வாரத்தில கட்டிராங்க. சரி, உலகத்திலே பெரிய டவர் கட்டியாச்சு, இவ்வளவு உசரமா கட்டி என்ன செய்ய போறீங்க, என்ற கேள்வி நம் வாசகர் மனதில் வரலாம். நீங்கள் நினைப்பதை உணர்ந்து பதில் சொல்வதே இல்லாமல் வேறு என்ன வேலை. தங்க ஒரு சர்வதேச புகழ் அர்மானி தன்னோட நட்சத்திர ஹோட்டல இங்க நட்த்த போகுது. 175 சொகுசு அறைகளும், 144 விரிவான தங்கும் வசதிகளும் அடங்கிய சூட்களுமென திட்டம் உண்டு. சுமார் 1,500 அடி உயரத்தில பொது மக்கள் போய் மேலே இருந்து கீழே பார்க்க வைக்க திட்டம் இருக்குது. இதுவே உலகத்தின் மிக உய்ரமான பார்வை மையம் என்பதும் ஒரு தகவல்.


144 தொடங்கி 146 மாடி வரை உள் வெளி கிளப். ஏங்க, 100/ 150 மாடியா இருக்கே. லிப்ட் ரொம்ப நேரமாகுமோ, என பயப்படாமல் இருக்க ஹை ஸ்பீடு லிஃப்ட் உதவியா இருக்கு. எண்ணம் உயர்வானால் செயல் உயர்வாகும். உயரம் அண்ணார்ந்து பார்க்க வைத்து அபிமானம் கூட்டும்... கூடவே ரொம்ப நேரம் பார்த்தால், கழுத்து வலியையும்...

துபாய் சுற்றி சுற்றி பல்பொருள் அங்காடிகள் உண்டு. சராசரி துபாய் வாழ் மக்களின் வார இறுதி திட்டங்களில் நிச்சயம் இது இடம் பிடிக்கும். வெறுமையான ஒரு தள்ளு வண்டியுடன் உள்ளே சென்று, கண்ணில் பார்த்தது, கையில் பிடித்து போடு. கொண்டு போன நடை வண்டியை நிரப்பு என்பதான எளிதான செயல் திட்டங்கள் உண்டு. என்ன இப்படிக்கா ஒரு நடை போய் வந்தால், மூன்று மணி நேரமும் ஒரு 500 திராமும் கணக்கில் கழியும். இதனால் தானே என்னவோ ஊரை சுற்றி ஷாப்பிங். எத்தனை வந்தாலும் போத வில்லை. பாருங்களேன் மொத்த பல் பொருள் அங்காடிகள் வாடிக்கையாளரை கவர, அதிரடி விலை குறைப்பு, தரம் என்று மட்டும் இல்லாமல் அனுபவம், உணர்வு என்ற அடுத்த கட்ட நிர்மாணத்துக்கு சென்று விட்டார்கள்.

உதாரணத்துக்கு இபுன் பத்துதா (இதுவும் ஒரு ஷாப்பிங் மால் பெயர்)..பார்ப்போமே. நம்ம பண்ணைபுர ராசா, அதான் இளையராஜா தத்துவார்த்தமாய் சொல்லுவார். இலக்கு என்பதற்கு இருப்பு கிடையாது. அது ஒரு ஓடும் தடாகம். சரிதான்.

நேற்று இந்த இபுன் பத்துதா திறந்த போது, உலகின் மிகப் பெரிய அங்காடியாய் இருந்த்து. இன்று அதை துபாய் மால் தட்டிச் சென்று விட்ட்து. சரி இப்போது என்ன செய்ய. உலகின் மிகப் பெரிய தத்துவ அங்காடி, அதாவது தீம் அங்காடி. சைசில் இது ஒன்றும் சளைத்த்து இல்லை. ஆறு அரங்கங்களாக சுமார் 1.3 கீ,மீ தூரத்தில் ஒரு அரங்கம், என்று சுமார் 8 கீ.மீ தூரம் உண்டு. சுருக்கமாய் சொன்னால் முழு தூரத்தையும் கடக்க ஒரு மனிதனால் ஒரு நாளாய் முடியாது. என்ன செய்யணும். ஒரு பக்கம் போயி, கால் வலிக்கிற வரை நடந்து பார்த்திட்டு, அதே இட்த்துக்கு திரும்ப வந்து வீட்டுக்கு போயிற வேண்டியது தான். இதே கணக்கில ஒரு நாலைஞ்சு தடவையா வந்து வந்து போனா ஓரளவுக்கு பார்த்துடலாம்.... 21 தியேட்டர்கள் உண்டு. ஐ மேக்ஸ் திரையும் உண்டு. என்ன, காசுதான் புடுங்கிடுவாங்க.. நம்ம காசுல சுளையா 500/600 துண்டு....

அரபு நாட்டின் சரித்திர அறிஞர் இபுன் பத்துதா 14ஆம் நூற்றாண்டின் ஆள். தன் தொலை நோக்கு பார்வையால், 6 நாடுகளில் சுற்றி தன் பயணம் பற்றிய விவரங்கள் எழுதியுள்ளார். அவர் நினைவாக அவர் பார்த்த 6 நாடுகளை அரங்கம் ஆக்கி இந்தியா, சீனா, எகிப்து என பெயரிட்டு சரித்திரத்தை ஷாப்பிங் ஆக்கியது சூப்பர்.

யார் இந்த இபுன் பதுத்தா. இங்கே சென்று பாருங்கள்..

ஐந்து நட்சத்திர ஹோட்டல்ல தான் நான் காப்பி குடிப்பேன். இதுக்கு மேலே எதாவது இருக்கா என்றால், இருக்கு வாங்க. ஏழு நட்சத்திரம் ஹோட்டல் ஒண்ணு கடலுக்குள்ள கட்டியிருக்காங்க. 

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்ற ("தல" தேர்தல் அறிக்கை) பாணியில் சொல்லி அதை செய்தும் விட்டது. 9999, அதாங்க, 2009 செப்டம்பர் 9ம் தேதி, 9 மணிக்கு ரயில் விடுவோம் என சொன்ன துபாய் அரசு சொன்ன தேதியில் சுக்கு புக்கு ரயில் விட்டு அமர்களப் படுத்தி விட்டார்கள்.

இந்த ஊர் வெயிலுக்கு இதெல்லாம் சரியா வருமா, இருக்குறதே முழ நீள ஊரு இதுலே ரயிலா, என்ற கேள்விகளை புரம் தள்ளி நல்லா வரும் என நம்பிக்கையோடே இருக்கிறது. பொத்தி பொத்தி வைச்சு இவ்வளவு நாளா என்ன நடக்குது என்றே தெரியாமல் இருந்த்தால் இப்ப போயி பார்த்த ஜனம் எல்லாம் ஆச்சர்யத்தில வாயடைச்சு நிக்குது.

இது சொர்க்க புரியா, விமான நிலையமா எனக் கேட்கும் வண்ணம், பாதாள ரயில் ஸ்டேஷன்கள், பறக்கும் ரயில் என நல்லா இருக்குது. ஏர்போர்ட்ல வண்டி ஏறியாச்சுன்னா, நிச்சயமா மூணே நிமிசத்தில் அல் ரிக்கா என்ற இடம் வந்து விடலாம். இதுவே சாலை வழி வந்தால் குறைந்த பட்சம் 30 நிமிடம் எனும் ரயிலுக்கே உண்டான சொகுசு மாற்றுக் குறையாமல் உள்ளது. இது முழுமை பெறும் போது நிச்சயம் நல்லா வரும். இதில் ஈடுபட்டு வெற்றி பெற்ற அனைத்து நிறுவனங்களுக்கும், மனிதர்களுக்கும் பாராட்டு சொல்லி, மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.


சென்ற பதிவில்  சொன்ன 7 நட்சத்திர ஹோட்டல் பற்றி பேசுவோமே. சின்ன வயதில் நாமாய் தீர்மானம் செய்து இருந்தோம் 3ஐ விட 5 நட்சத்திர ஹோட்டல், பெரிதும் வசதியும் ஆனது என. அதுவே வளர்ந்து வரும் போது ஏன் இதுவும் பெரிசாத்தான் இருக்கு, நல்லாத்தான இருக்கு இது மட்டும் ஏன் 3 ஸ்டார் ஹோட்டல் என்று. அன்று நாம் கேட்டது இப்படி.

அழகு, வசதி இன்ன பிற* இத்தியாதிகள் எல்லாம் இல்லாமல், அன்னிய தேசத்தினரை மனதில் கொண்டு வடிவமைக்கப் பட்டதே இந்த கோட்பாடுகள் என்று. அதாவது வெள்ளைக்காரன் பர்ஸ்ல டாலர் குமிஞ்சு இருக்கும், அதை லோக்கல் கரன்ஸியா மாற்ற எக்ஸ்சேஞ்சு ஹோட்டக்குள்ளயே இருந்து, 24 மணி நேரமும் அவன் எப்போ வந்தாலும் அவன் பசியார உணவு கொடுக்க மல்டி குசின் உணவகமும் இருந்தா அது 5 ஸ்டார்ன்னு.

ஆனா உண்மை என்ன*ன்னா, சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த அல்லது எல்லோரும் ஒப்புக்கொண்ட ரேட்டிங் சிஸ்டம் எல்லாம் கிடையாது. ஓட்டல் உரிமையாளர்கள் மத்தியில் இதுக்கென சில வரைமுறைகள் உண்டு.அம்புட்டுதேன். இல்லாமல் நாமாக அறிவித்து கொள்வது தான் இந்த 7 ஸ்டார். சுருங்கச் சொல்லின் தன் துருத்தியை தானே ஊதுவது 7 ஸ்டார். உலகில் இப்போது இருவர் ஊதி உள்ளனர். நாங்க 7 ஸ்டார்ன்னு. ஒருவர் துபாய், மற்றவர் இத்தாலி. பொறுங்கள் ஊதுவதற்கு இன்னும் அஞ்சு பேர் இருக்காங்க கங்கணம் கட்டிக்கிட்டு இருக்காங்க அல்லது ஹோட்டல் கட்டிக்கிட்டு இருக்காங்க. அதில் சென்னையில் உள்ள கிராண்ட் சோழாவும் ஒருவர்.

ஆயிரம் அடிக்கு மேலா நிமிர்ந்து நிக்குற* இந்த புர்ஜ் அல் அரப் ஒரு கட்டிட அதிசயம் எனச் சொன்னால் மிகையாகாது. கடலுக்கடியில் பவுண்டேசன் போட்டு, கம்பீரமாக நிற்கும் அதன் அழகை படத்தில் பாருங்களேன். கடலில் இருப்பதால் இது அமைக்கப்பட்டுள்ள கப்பல் போலத் தோற்றம் பொருத்தமாகவும், பொம்பார்டாவும் இருக்கு (பெங்களூர் தமிழில் இது பிரபலம். சூப்பர், நச்சு, பின்னிருச்சு எனும் அர்த்தம் வரும் சொல்) என்ன ஒண்ணு தங்கணும்னா, ஒரு நாள் வாடகை சுமார் 50,000 ரூபாய். இதுக்கு பேசாம் ஒரு வீடே வாங்கி தங்கிராலாமே என தங்கள் மனது முணுமுணுப்பது கேட்டாலும், ரோல்ஸ் ராய்ஸ்ல விமான நிலையம் வந்து கூப்பிட்டு போவாய்ங்கங்கும் போது, ஒரு ராஜ உபசாரம் எனும் போது, சரி ரைட்டு என்று சொல்லத்தானே தோன்றுகிறது.

போய் பக்கத்தில போயி ஃபோட்டா எடுத்துக்கிட்ட்தோட சரி. நாங்க உள்ள எல்லாம் போனதில்ல. சொல்லக் கேள்விதான், நம்மள மாதிரி ஆளுங்க உள்ள நுழையிறதே கொஞ்சம் கஷ்டம் என்று.

எந்த பிரபலமான ஒரு கட்டிடத்துக்கும் ஒரு காண்ட்ராவெர்ஸி உண்டல்லவா. இதுக்கும் உண்டு. அது உண்மையா பொய்யான்னு எங்களுக்கும் தெரியல, கேட்டா கேட்டவய்ங்களுக்கும் தெரியல. எது எப்படியோ, அது உண்மையில்லை என தெரியும் வரை நாமும் பெர்மூடா ட்ரையங்கிள் போல கேட்டு வைப்போம்.

இதை வடிவமைத்த நிர்மாண என்ஜினியர், தனது மதத்தின் அடையாளம் பொறித்த ஒரு வழிபாட்டுத்தலம் போல இருக்குதாம் இந்த டிசைன். கஷ்டப்பட்டு கடலுக்கு அடியில கட்டினாலும், கடலுக்குள்ள போயி கடல் எல்லாம் தெரியுர மாதிரி போட்டா புடிக்க முடியலயாம். சைடு வியூவுல தான் இன்னும் போட்டா எடுக்க வேண்டி இருக்குதுன்னு சொல்றாங்க.

மேலும் தொடரும் ...................

6 comments:

  1. அருமையாக இருந்தது நீங்கள் துபாய் பற்றி விவரித்தது
    நகைச்சுவை நடையில் படிக்க அருமையாக இருந்தது என்னை அறியாமல் அலுவலகத்தில் உரக்க சிரித்துவிட்டேன்.

    ReplyDelete
  2. நன்றி நண்பரே !!!!

    ReplyDelete
  3. துபாயின் கட்டிட கட்டுமானத்தை பற்றி சிறப்பான தகவல் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. நன்றி நண்பரே !!!!

    ReplyDelete
  5. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : சுரேஷ் குமார் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கடல் பயணங்கள்

    வலைச்சர தள இணைப்பு : மின்மினி பூச்சியும் மற்றும் சிலரும் !

    ReplyDelete
  6. வலைச்சரம் மூலமாகத் தங்களின் வலைப்பூவினைப் பற்றி அறிந்தேன். பாராட்டுகள்.

    ReplyDelete