முக்கிய செய்திகள்

Wednesday, June 20, 2012

சாபமா, வரமா துபாய் -பாகம் -6


  1. பாகம் -1   http://thanjavursiva.blogspot.com/2012/06/1.html
  2. பாகம் -2   http://thanjavursiva.blogspot.com/2012/06/2.html
  3. பாகம் -3   http://thanjavursiva.blogspot.com/2012/06/3.html 
  4. பாகம் -4   http://thanjavursiva.blogspot.com/2012/06/4.html
  5. பாகம் -5   http://thanjavursiva.blogspot.com/2012/06/5.html


வந்தோம் துபாய்க்கும்.. வீட்டுக்கும்...... பெட்டி படுக்கை வைத்து விட்டு சாப்பிட சென்றோம். சாப்பிட்டும் முடித்தாயிற்று. உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு என்ற பழமொழி மனதில் ஓட கால் தயங்க ஒரு கிறங்கிய அன்ன நடை....
Name:  pp.jpg
Views: 5
Size:  3.4 KB

கையில் உள்ள பாஸ்போர்ட் லேசாய் கனத்தது. நம் ஊர் விட்டு அயல் நாடு வரும் போது இது ஒரு தொல்லை. எப்போதும் நாம் யார் என்று சொல்லும் எதாவது ஒரு அடையாள சீட்டு கையில் வைத்து கொண்டு இருக்க வேண்டும். இல்லை என்றால் காவலர் வசம் சிக்கி, திக்கி பின் விக்க வேண்டி இருக்கும்.

இந்த தொல்லை இவருக்கு இல்லையே. அது ஏன். உடன் வந்த நண்பர் சொன்னது. நாளை காலை நம் அலுவலகம் சென்றதும் பாஸ்போர்ட் கொடுத்து மெடிக்கல் டெஸ்ட் செய்து முடித்து விட்டால் நம் பாஸ்போர்ட்டில், நாம் பணிபுரியப்போகும் அலுவலகத்தின் பெயரை விசா வடிவில் ஸ்டாம்ப் ஆனதும் நம் கையில் பத்தாகா (PATHAKA) கிடைக்கும்.

ஞே! என்று இருந்தது. ஒன்றும் புரியவில்லை. விசா... பத்தாகா. எந்த லாலா மிட்டாய் கடையில் கிடைக்கும் என்று கேட்க வாய் வரை வந்தது, கேட்கவில்லை.

அன்னிய நாட்டில் தங்க அனுமதி தருவது விசா (Visitors Intention to Stay Abroad என்பதின் சுருக்கம் தான் விசா என்பது).

அந்நிய நாட்டின் உள்ளே வந்தவர், விசா மெடிக்கல் முடித்து, வேலை செய்ய தகுதியானவர் என்று ஆஸ்பத்திரி அத்தாட்சி வழங்கியவுடன் இந்த வேலைக்கான விசாவை கம்பெனியின் பெயருடன் பாஸ்போர்டில் சீல் குத்தி, ஒரு அடையாள அட்டை வழங்குவது ஆங்கிலத்தில் லேபர் கார்டு. தமிழில் பணி அட்டை. இதற்கு தமிழில் இப்படி சொல்லி விடோம். பணி அட்டை என்று சொன்னால் கடிக்கவா செய்யும். பத்தாக்கா என்று செல்லமாய் அமீரகத்தில் அழைப்பார்கள்.

இதே அட்டையை இக்காமா என்ற பெயரில் சவுதி அரேபியாவில் அழைப்பார்கள். ஒரே அரபி மொழியில் ஏன் இரண்டு வேறு வார்த்தைகள் என்ற கேள்விக்கு பதிலை சாய்சில் விட்டு விட்டேன்.

இங்கு இன்னும் ஒரு கொடுமை உண்டு. நம் பாஸ்போர்ட் நம் வேலை செய்யும் நிறுவனத்தில் கொடுத்து விட்டு அவர்கள் தரும் பணி அட்டையை சுமந்து கொண்டுதான் எல்லா இடங்களுக்கும் செல்ல வேண்டி வரும். நாடு விட்டு நாடு செல்ல பாஸ்போர்ட் வேண்டும். அதை பணயம் வைத்து விட்டு தான் வேலை தொடங்க வெண்டும். நிறுவனங்கள் பாதுகாப்புக்காக செய்யும் தகிடு தத்தம் இது.

அரபு நாடுகளில் கூட இது போன்று ஒருவரின் பாஸ்போர்ட்டை கம்பெனி வைத்துக்கொள்ள கூடாது என்ற ஒரு சட்டம் உண்டு. அப்படி செய்ய கூடாது என்று. யார் மதிக்கிறார்கள். தான் போடும் சட்டங்களை தானே மீறுவது தானே மனிதனுக்கு அழகு.

அந்த வேலையை இங்கு உள்ளவர்களும் கடைப்பிடிக்கிறார்கள்

வீடு வரை செல்ல ஒரு வாடகை கார் அமர்த்திக் கொண்டோம். வகை தொகையில்லாமல் வீட்டு வாடகை என்று முன்னோரு அத்தியாயத்தில் பார்த்தோம்.

அயல்நாட்டு மோகம் - மத்திய கிழக்கு நாடுகள்-barsha-toll.jpg


அடுத்தது இந்த டாக்ஸி தான். ஏறி அமர்ந்ததும், 3.50 திராம் என மீட்டர் ஆரம்பித்தது. நம் ஊர் கணக்குக்கு ஒரு 45 ரூபாய்க்கும் மேல் (தற்போதைய மதிப்பு 1 திராம் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் Rs.13/-) . அதெல்லாம் சரி, பத்தடி தூரம் நகர்ந்து மீட்டர் 4 திராம் என்று காண்பிக்கும்போது நாம் இறங்குகிறோம் என்றாலும் குறைந்தபட்சமாக 10 திராம் எண்ணிக்கொடுக்க வேண்டும். அது ஏன். 10 திராம் குறைந்த கட்டணம்.

ரொம்ப தூரம் இல்லை, ஒரு 20 கீ.மீ தூரம் சென்றால், சில நேரம் செல்ல வேண்டி இருக்கும். 100 திராம் வரை தர வேண்டி இருக்கும். இந்த தொகையில் சிக்கனமாய் சாப்பிட்டால் ஒரு மாதம் முழுக்க காலை வேளை உணவை சாப்பிடலாம்.

விமான நிலையத்தில் இருந்து கிளம்பினா மீட்டர் 20 திராமில்தான் தொடங்கும். இது ஏன் இவ்வளவு என்றால் இந்த டாக்ஸி கம்பெனியின் ஓனர்தான் இந்த சட்டத்தை போட்டவர். அவருக்கு என்று வரும்போதும் விட்டு விடுவாரா என்ன??

அவ்வளவு ஏன், துபாயின் ப்ளேன் கம்பெனி ஓனர் தான், அந்த துறை மந்திரி. அவரே சட்டம் போட்டுட்டு அவரே கடை பிடிப்பார், அல்லது கடை விரிப்பார்.
வெண்ணை போல் வழுக்கிட்டு ரோட்டுல கார் ஓடுனாலும் நம்ம வயத்துல டன், டன்னாக புளி கரைக்குது. ஏன்?

சரி நகர்ந்து செல்லும் வாகனத்தின் கண்ணாடி வழியே கொஞ்சம் வெளியே நடக்கறத பார்ப்போம். வேகமா ஓட்டுற ஒட்டுனர். ஒரு சில இடத்திலே மட்டும் ப்ரேக்கை அமுத்தி கொஞ்சம் மெதுவா போறார். அப்புறம் ஸ்பீடா போறார். கொஞ்ச நேரம் ஆனதும் இதே குத்து... அல்லது கூத்து தான் (இது என்ன உள்குத்து, வெளிகுத்து?). பாத்துடுவோம்.....ஏன் இப்படின்னு?.வண்டியின் வேகம் பரிசோதித்து, அறிவிக்கபட்ட வேகத்திற்கு மேலே இருந்தால் ஒரு போட்டாவும் எடுத்து நம்ம வண்டி பெயர் பலகையோட சேர்த்து உடனே நம்ம கணக்கிலே ஒரு அபராதமும் விழும். அதுவும் எவ்வளவு தெரியுமா நம்ம ஊர் கணக்கிலே 8000 ரூபாய். மிக விரைவில் நடக்க இருக்கும் மற்றொரு கூத்து இது.

சரி, யாரு நம்மள போட்டோ எடுக்கறது என்றால், சாலைகளில் ஆங்காங்கே பொறுத்தப்பட்டு இருக்கும் ரேடார் கேமராதான்...

அயல்நாட்டு மோகம் - மத்திய கிழக்கு நாடுகள்-radar.jpg

இது என்ன பகல் கொள்ளையால்ல இருக்கு என்று நேயர்கள் மனதில் ஒடுவது தெரிகிறது, இதெல்லாம் ஜுஜூபி கண்ணா....வெறும் ட்ரைலர், இன்னும் கொஞ்சம் கேளுங்க... ... அதான் மெயின் பிக்சர்......

சாலிக் : இது புதுசு கண்ணா புதுசு. 100 திராம் செலவழிச்சி நம்ம ஒரு ஸ்டிக்கர் வாங்கி நம்ம வண்டியிலே ஒட்டணும். அப்புரமா வண்டி ஓட்டணும் (இப்போது துபாயில் சாலிக் ஸ்டிக்கர் ஒட்டாத வண்டி ஒண்ணு கூட பாக்க முடியாது).
சரி, மேல என்ன?


வண்டி ஓடும் போது சில ரோடுகள்லே தோரணம் மாதிரி டோல்கேட் இருக்கும் (இவர்தான் துபாயின் இன்றைய தேதியின் கலக்ஷன் கிங். நம்ம சூப்பர் ஸ்டார் நடிச்ச "சிவாஜி தி பாஸ்" ஒலகம் முழுக்க கலக்ஷன் பண்ணின அமௌன்டை இவரும் ஒவ்வொரு வாரமும் நெருங்கி வர்றார்)..

சத்தம் எதுவும் போடாம அது பாட்டுக்கு நம்ம வண்டியில் உள்ள ஸ்டிக்கர் கிட்ட ஒரு முத்தம் கொடுத்துட்டு நம்ம கணக்கிலே ஒரு 4 திராம் கழிச்சுக்கும். வார்த்தையை கவனியுங்க. கழிச்சுக்கும். ஒரு கணக்குல பார்த்தா துபாய் போயிட்டு வீட்டுக்கு வந்தா ஒரு 32 திராம்  கணக்குல கழியுது..... பேண்ட் கிழியுது.......கிழிஞ்சு தொங்குது......

(தொடரும்........) 


10 comments:

  1. Good write up. Thanks.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்களுக்கு நன்றி !!

      Delete
  2. இன்னும் அனுபவிக்க நிறைய இருக்கு என்று தோனுகிறது. இவையெல்லாம் நான் இருந்த ஏழு மாதங்களுக்குள் தெரிந்துகொண்டேன்.
    தப்பித்தவறி ஓட்டுனர் உரிமம் என்று இறங்கிவிடாதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்களுக்கு நன்றி !!!ஓட்டுனர் ஊரிமம் பெற்றுவிட்டேன் அதற்கு நான் பட்ட பாடு பின் வரும் பதிவுகளில் வரும் ,கடந்த ஒரு வருடத்தில் 7 முறை நானும் எனது காரும் போலீசாரால் படம்பிடிக்க பட்டுள்ளோம் ...

      Delete
  3. ரொம்ப அழகாக, நகைச்சுவையாக, ஆழமாக எழுதியிருக்கிறீர்கள். துபாய் வர எல்லோரும் தெரிந்துகொள்ள உங்கள் பதிவில் ஏராளமான விஷயங்கள்! தொடருங்கள். நானும் உங்களை தொடர்கிறேன். (Please remove Word Verification)

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்களுக்கு நன்றி !!அன்புடன் வரவேற்கின்றேன் !!!!!

      Delete
  4. இனி துபாய் போவோர்க்கு நல்லதொரு வழிகாட்டியாகவும், படிப்பினையாகவும் விளங்கும் வகையில் கட்டுரை அமைந்தமைக்கு பாராட்டுகள் சிவகுமார் :)

    ReplyDelete
  5. அருமையான நகைசுவை நடை! ஒவ்வொரு வரியும் உண்மை!

    அன்புடன்,
    தக்குடு
    கத்தார்

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்களுக்கு நன்றி!!!!

      Delete
  6. Super anna. Its very useful to all... keep on going anna ... saranyamahesh

    ReplyDelete