முக்கிய செய்திகள்

Wednesday, February 15, 2012

அத்தை /மாமன் பொண்ணுகளை லவ் பண்ணாதிங்க !!!

நீங்க யாரையாவது லவ் பண்றீங்களா? இன்னும் இல்லையா? ஒகே. அப்படியே யாரையாச்சும் லவ்வுற ஐடியா இருந்தா, உங்க அத்த பொண்ணையோ, மாமன் பொண்ணையோ லவ் பண்ணாதீங்க! ஏன்னா அது ரொம்ப டேஞ்சரு! பலபேரு கஷ்டப்பட்டு, ஆராய்ச்சி பண்ணி, கண்டுபுடிச்சிருக்காங்க!
மேல படியுங்க!

இதுதான் என்னோட முதல் காதல்...!!!!!!

லவ் பண்ணுற எல்லோருமே சொல்ற முதல் பொய் இதுதானே! இத உங்க முறைப் பொண்ணுகிட்ட சொல்ல முடியாது! அவ பதிலுக்கு ' அப்போ ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது சாந்திய லவ் பண்ணீங்களே ' அப்டீன்னு உங்க ஜாதகத்த எடுத்து விட்ருவா! அப்புறம் உங்க மானம் ப்ளையிங் ஆன் த காத்து!

எங்க பேமிலி ல எல்லாரும் என்மேல ரொம்ப மரியாத வச்சிருக்காங்க!
இப்படி நீங்க மனச்சாட்சியே இல்லாம பொய் சொல்லுறத, வேற பொண்ணுங்க நம்புவாங்க! பட் அத்த பொண்ணு? சான்சே இல்லங்க, அவ நம்ப மாட்டா! அவளுக்குத்தான் தெரியுமே உங்களுக்கு 'எம்புட்டு மருவாதை ' இருக்குன்னு!

எனக்கு பாரின் போறதுக்கு நிறைய  வந்துச்சு! நானும் போனேன் !!!
" அப்புடியா எப்ப வந்துச்சு? இதப்பத்தி அத்தை எதுவுமே எங்கிட்ட சொல்லலியே " னு சடன்லியா ரியாக்சன் குடுப்பா உங்க அத்த பொண்ணு! தேவையா இது!

உனக்குப் புடிக்குமேன்னு இந்த ஷார்ட ஐநூறு ரூபா குடுத்து வாங்கினேன்!
உங்க அண்ணனோட ஷார்ட போட்டுக்கிட்டு, அவ முன்னாடி போயி நின்னு இப்படியெல்லாம் பீலா வுட முடியாது! டக்குன்னு கண்டு புடிச்சுடுவா! அதுமட்டுமில்ல, பிரெண்டோட வாட்சு, செல்போனு, பைக்கு, செயினு இதெல்லாம் கடன் வாங்கிகிட்டு, உங்களோடது னு சொல்லி மத்த பொண்ணுங்கள ஏமாத்தலாம்! உங்க அத்த பொண்ண ஏமாத்த முடியாது!
அவளுகளுக்குத்தான் நம்மளப் பத்தி முழுசா தெரியுமே!

ஆயுசு உள்ளவரைக்கும் உன்னைய பூப் போல தாங்குவேன்!
நம்புவாளா? இல்ல நம்புவாளா? ங்கறேன்! ' மொதல்ல போயி மாமாவுக்கு ஒத்தாசையா வாய்க்கா, வரப்புல வேலையைப் பாருங்க! அவிங்கள மொதல்ல நல்லா கவனியுங்க ' அப்டீன்னு மூஞ்சியில அடிச்ச மாதிரி சொல்லிட மாட்டா?

நான் சின்ன வயசில ரொம்ப சமத்தா இருப்பேனாம்!
பொம்புளப் புள்ளைங்க மனசுல இடம் புடிக்க எல்லாப் பையன்களும் பொதுவா இப்புடி சொல்லுறதுதான்! ஆனா இதையே உன்னோட அத்தப் பொண்ணுகிட்ட சொன்னா " இல்லையே நீ ஆறுவயசில பக்கத்து வீட்டுல பன்னு களவாண்டு தின்னதா அத்த சொன்னாங்களே " அப்டீன்னு அந்தப் பொண்ணு உண்மையச் சொல்லிடும்! தேவையா இது?

பாத்தீங்களா! நம்ம அத்த பொண்ணுகள லவ் பண்ணுறதில இம்ம்புட்டு ப்ராப்ளம் இருக்குன்னு!
இதுமட்டுமா?

" மூணு நாளைக்கு ஒரு வாட்டிதான் குளிக்கிறீங்களாமே? "

" எதுக்கு ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு வரைக்கும் ஊர் சுத்துறீங்க? "

" உங்க செல்போனுக்கு ரீசார்ச் பண்ண, மாமா பாக்கெட் ல இருந்து எதுக்கு பணம் எடுத்தீங்க? "

" அந்த பெட்டிக்கடை மணியம் கிட்ட நானூறு ரூபாக்கு கடன் வாங்கியிருக்கீங்களாமே? எதுக்கு? "

" காலேஜ்ஜுக்கு கட் அடிச்சிட்டு படம் பார்க்க போனீங்களாமே "

இந்த மாதிரி நம்மளப் பத்தி A - Z கலெக்ட் பண்ணி வச்சிட்டு, நம்மள கொன்னுடுவாய்ங்க! இப்ப சொல்லுங்க அத்த பொண்ணுங்கள லவ் பண்ணலாமா? அவளுங்ககிட்ட நம்ம பருப்பு வேகுமா? நமக்கு இருக்கிற கொஞ்ச நஞ்ச மரியாதையும் காத்துல பறந்துடாது?
லவ்வுன்னாலே ஒரு கிக்கு இருக்கணும்! கொஞ்சம் பொய், கொஞ்சம் பீலா இதெல்லாம் இருந்தா தான் லவ் இனிக்கும்!!!!!!!!

2 comments:

 1. Norton Internet Security 2012 2Years License உடன் இலவசமாக கிடைக்கிறது !

  http://tamiltechtips.blogspot.in/2012/02/norton-internet-security-2012-v19113-2.html


  Pendriveய் Ramஆக பயன்படுத்தலாம் !

  http://tamiltechtips.blogspot.in/2012/02/usb-drive-as-ram-give-your-windows-xp.html


  மெமரி Card Data Recovery Software !

  http://tamiltechtips.blogspot.in/2012/01/memory-card-data-recovery-software.html

  ReplyDelete