முக்கிய செய்திகள்

Saturday, August 25, 2012

பயணம் - அபுதாபி to சலலாஹ் (ஓமன் ) பகுதி -1


பயணம் - அபுதாபி to சலலாஹ் (ஓமன் ) -1100 Km

இக்கட்டுரை அபுதாபி to சலலாஹ் (சாலை வழி)  நான்கு நாள் பயணம் பற்றியது.வாழ்வில் மறக்க முடியாத விடுமுறை கொண்டாட்டங்களில் இதுவும் ஒன்று.நண்பர்கள் 8 பேருடன்  ,இரண்டு குழுக்களாக மகிழ்வுந்தில் பயணம் .எல்லோருமே முதல் முறை செல்பவர்கள் ,எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது அனால் அதற்கும் மேல் ஆச்சரியம் எங்களுக்கு காத்திருந்தது...........இந்த அனுபவம் முன்னே சென்று வந்தவர்களுக்கு இனிமையான நினைவுகளையும் ......இனி செல்பவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக அமையும் என முன்னுரை தந்து கட்டுரையை பேச்சுதமிழில்  (தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும் ) தொடங்குகிறேன்.

இந்த ரம்ஜான் லீவுக்கு எங்களுகெல்லாம் எட்டாக்கனியா இருந்த சலலாஹ்தான்(Oman)  தேர்வு செய்த முதல் இடம் ,ஏன்னா அது ஊட்டி கொடைக்கானல் ரேஞ்சுக்கு இருக்குனாக்ங்க!!!.என்னடா இது பாலைவனத்துல ஒரு சோலைவனமான்னு லேசா டவுட்டு வந்துச்சு .இருந்தாலும் 1100 km அட்வென்சர் டிரைய்விங்  நெனைச்சு கிளம்ப முடிவு செஞ்சிட்டோம்.இது இரண்டு வருஷமா போட்ட திட்டம் ....என்னடா நீங்களும் சொல்லிட்டுதான் இருகிங்களே  போற மாதிரி தெரியலையே ???கேட்டவன்களுக்கு ஒரு . (முற்றுபுள்ளி ) வச்சு நாங்க ,(கமா) போட்டு தொடங்கியாச்சு.

முதல்ல ஆள சேர்க்கணும் !!எங்க திட்டப்படி 10 பேர்,2 வண்டி.குறஞ்சது  15 பேர்கிட்ட சொன்னா 10 அவது தேறும் .......இது இல்லாம 2 பேர் உதிரியா(ஸ்பேர்) வச்சிருந்தோம் ....கடைசி நேர மாறுதலுக்காக..இவுககிட்ட   சலலாஹ் பத்தி  சொல்லி...மேப்பகாட்டி... புரியவசசு.....விளக்குரதுகுள்ள நாம போயிட்டு வந்துருவமானு பயங்கர டவுடாயிடிச்சு...இருந்தாலும் மனம் தளராம(நாங்க) இருந்ததனால 8 பேர் தேத்திட்டோம் ..இன்னும் 2 பேர் வேணுமே ...அத ஸ்பேர்லேர்ந்து சேர்த்துகிட்டோம்  ஒருத்தர் மிஸ்டர் அருண்   இன்னொருத்தர் மிஸ்டர் அண்ணாதுரை இவரு கடைசி வரைக்கும் ஒத்துக்கவே இல்ல ..கேப்டனே இல்லேன்னா ...நாங்க வண்டி ஓட்டமாடோம்னு சொன்னதனால ஓகே ஆயிடுச்சு ....(கேப்டன் -பேருக்கு எவ்லோ மவுசு !!!!!!) .எல்லோரும் அவுங்க பாஸ்போர்ட் வாங்க சொல்லிட்டோம் .இதுல முதல்ல வாங்கினது நம்ம அருண் .....சலலாஹ் போற ரோடோட ரேக!!!! அப்ப அவரு முகத்துல தெரிஞ்சுச்சு .......

ஆக  நாங்க 10 பேர் ரெடி !!!!!

1.தஞ்சை சிவா
2.மெல்லியல் ராபர்ட் ஜி
3.மனோஜ்
4.அருண்
5. பிரகாஷ்
6.முருகன்
7.அண்ணாதுரை
8.ரகு
9.அருண்
10.செந்தில்

எல்லோர் கைலேயும் இப்போ பாஸ்போர்ட் ரெடி !!! எப்போ ??எப்படி ??எங்கேந்து? கிளம்புறது .எவ்வளவு நாள்?எப்போ திரும்புறது? தெரியல !!! அதனால குழுவுல சில  தீர்மானம் கொண்டு வந்தோம் .

1.மொத்தம் 4 நாட்கள் வெள்ளி,சனி,ஞாயிறு ,திங்கள் -வியாழன் இரவு தொடங்கி திங்கள் இரவு திரும்பும் திட்டம்.
2.1100 km -12 மணி நேர பயணம் அதனால நள்ளிரவு  1.00 மணி என்று முடிவானது ,2 மணி நேரம் AL AIN பயணம் ,ஆக 4 மணிக்கு ஓமனில் நுழைய வேண்டும் ,மாலை 4 மணிக்கு சலலாஹ் சென்றடைய வேண்டும் என்பது எங்கள் திட்டம்
3.எல்லோரும் வியாழன் இரவு 11 மணி அளவில் அபுதாபி  எங்கள் ரூமில் ஆஜராக  வேண்டும் .....


இந்த தீர்மானம் நிறைவேற்றபட்டு...எல்லோரும் வியாழன் இரவு நோக்கி .....

இதற்கு முன் ஏற்பாடாக அபுதாபி டு சலலாஹ் கூகுள் ரூட் மேப் ஒன்று ரெடி செய்தோம் ..7 ஸ்டேஜஸ்..........

1.ஸ்டேஜ் 1 -அபுதாபி டு அல் அயன்(Al Ain )-140 km
2.ஸ்டேஜ் 2 அல் அயன் டு இப்ரி(Ibri -Oman ) -125 km
3.ஸ்டேஜ் 3 இப்ரி டு ரோடு 29 -31 சந்திப்பு -213 km
4..ஸ்டேஜ் 4 ரோடு 29 -31 சந்திப்பு டு ஹைமா(haima)-229 km
5. ஸ்டேஜ் 5  ஹைமா டு முஸ்கின் (Mushkin)-223 km
6. ஸ்டேஜ் 6  முஸ்கின் டு  தும்ரைத் (Thumrait)-188 km
7. ஸ்டேஜ் 7  தும்ரைத் டு சலலாஹ்(Salalah) -82 km


இந்த ரூட் மேப்ப பிரிண்ட் எடுத்து பைண்ட் பண்ணி கொடுத்து ,முகத்துல தெரிஞ்ச ரேகைய கைல எடுத்து கொடுத்த அருணுக்கு நன்றி !!!!!

என்னடா அருண பத்தி இவ்வளோ சொல்றனேன்னு நீங்க நினைக்கலாம் ஆனா இதுக்கும் நாயகன் பட மியூசிக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு ........

ரெடியா இருங்க அடுத்த பதிவுல நாம அபுதாபிலேர்த்து கிளம்புறோம்


அன்புடன்

தஞ்சை சிவா

4 comments:

  1. காரீப் சீசனில் நன்றாக இருக்கும். மஸ்கட்டில் இருந்தாலும் அங்கு போக சரியான நேரம் அமையவில்லை.

    ReplyDelete
    Replies
    1. அங்கு சீசன் செப்டம்பர் முதல் நவம்பர் வரை -மழை அருவிகளில் குளிக்கலாம்

      Delete
  2. நாங்க மஸ்கட் வரை தான் போயிருக்கோம்,
    தொடருஙக்ள்

    ReplyDelete
    Replies
    1. எங்கள் முதல் திட்டம் மஸ்கட் செல்வது .....அதை ரத்து செய்துவிட்டு சலலாஹ் சென்று விட்டோம் ...

      Delete