- பாகம் -1 http://thanjavursiva.blogspot.com/2012/06/1.html
- பாகம் -2 http://thanjavursiva.blogspot.com/2012/06/2.html
- பாகம் -3 http://thanjavursiva.blogspot.com/2012/06/3.html
- பாகம் -4 http://thanjavursiva.blogspot.com/2012/06/4.html
- பாகம் -5 http://thanjavursiva.blogspot.com/2012/06/5.html
- பாகம் -6 http://thanjavursiva.blogspot.com/2012/06/6.html
முதல் நாள் கட்டுமான் பொறியாளராக அலுவலகம் வந்த போது சந்தோசமாய் ஒரு புன்னகை. ஆ...ஹா..நல்லா இருக்கே. குளு குளு சூழல், பள பளவென தரை, மெத்து மெத்துன்னு குஷன் சோபா, பெரிய தோரணையில் மேசை நாற்காலி. இந்தியாவில் மேல் தட்டு மேனேஜருக்கு மட்டுமே கிடைக்கும் சௌகரியம் இங்கே சாதாரணமாய் எல்லாருக்கும் கிடைக்கும். அது என்ன?
அழுது புரண்டு வாங்கும் நமக்கே நமக்காய் உள்ள கணிணி / கம்ப்யூட்டர் உச்ச கான்பிகுரேஷன் இங்கு நாம் கேட்காமல் கிடைக்கும். பேனா, பென்சில், நோட், பன்சிங்க் மெசின், இந்த கூட்டத்தில் ஒரு கம்ப்யூட்டரும் கிடைக்கும். விலை ரொம்ப சல்லிசு ஒரு காரணம் என்றாலும், வேலை செய்ய உபகரணம் அவசியம் என்ற நம்பிக்கையும் இருப்பதால்.
வேலை நேரத்தில் கசக்கி பிழிவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. எட்டு மணி நேர வேலையை நம் ஊரில் அழுது அழுது... (மூக்கால் அழுதுதான் - அது எப்படி மூக்கை வைத்து அழுவது) செய்யும்போது சர்வ சாதாரணமாய் இங்கு 12, 15 மணி நேரம் வேலை செய்வார்கள்.தசாவதானி என்று (கமல்ஹாசன், ராஜேந்தர் அல்ல) கேட்டு இருக்கிறோம். ஆனால் இங்கே பார்த்து விடலாம். கையில் ஒரு தொலைபேசி, கழுத்துக்கும் தோளுக்கும் இடையில் முட்டு கொடுத்து ஒரு கைபேசி, கை விரல்கள் ஓட விட்டு கணிணியின் தட்டுதலில், கண்கள் பக்கத்தில் உள்ள ஃபேக்ஸ் இயந்திரத்தில் வரும் சேதியை வாசித்துக் கொண்டும், என கதகளி ஆடி கொண்டு இருப்பார்.
முதல் முணு மாசம் கூட வேலை செய்றவங்க,அறை நண்பர்கள்தான் நமக்கு சட்ட ஆலோசகர் ,காலையில் இருந்து இரவு வரை அடவைஸ்-ங்கற பேர்ல கொடுக்கிற டார்ச்சர் திரும்பவும் பிளைட் பிடிக்கலாமுன்னு தோணும்
1 .இங்கே பெட்ரோலுக்கு குடிக்கிற தண்ணீரைவிட விலை குறைவு
2 .படிப்பு இல்லாதவர்களுக்கு ....படித்தவர்களைவிட சம்பளம் அதிகம்
3.உண்மையான திறமை இருந்தாலும் ...ஜால்ரா.....அடிக்கிரவங்களுக்
4 .கம்பனிகளுக்கு வேலையாட்கள் பிடிக்காவிட்டால் ....எக்காரணத்தை கொண்டும் விலையை விட்டு நீக்கலாம்.
5 .சிபாரிசு இருந்தால் எந்த ஒரு அடி முட்டாளுக்கும் பெரிய பதவி கிடைக்கும்.
6 .கம்பெனி முதலாளிக்கு !!அலுவலக அதிகரிகளைவிட ...டிரைவருக்கும் ..ஆபீஸ் பாய்க்கும் ...உறவு அதிகமாக இருக்கும்.
7 .அரபிகளின் மனசும் ....அரபு தேசத்தின் தட்ப வெப்ப நிலையும்... நமக்கு புரியாது ...எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும்.
8 .அரபு நாட்டில் பணம் சம்ப்பாதிக்கவிட்டால் ....உலகின் எந்த மூலையிலும் பணம் சம்பாரிக்க முடியாது.
9 .நேரம் சீக்கிரமாக போகும் ....ஒரு வெள்ளியில் இருந்து இன்னொரு வெள்ளி கிழமைக்கும் உள்ள தூரம் ரொம்ப குறைவாக தோன்றும் .
10 .எந்த ஒரு கல்யாணம் பண்ணாத வாலிபனின் கனவு ........சொந்த மண்ணில் போகும் விடுமுறையும் ....அவன் கல்யாணமும்...என்றால் கல்யாணம் ஆனவர்களின் கனவு ...பாமிலி விசாவும் ...அதன் பின் வரும் செலவுகளும்........
11 .ஒவ்வொரு 5 கிலோமீட்டர் இடைவெளியில் ஒரு ஷாப்பிங் மால்
12 .நம் நாட்டின் சாலையின் அகலமும் ...அரபு நாட்டின் சாலை ஓர விதியின் அகலமும் சமமாக இருக்கும்.
13 .போக்குவரத்து சிக்னலில் பச்சை நிறம் இந்தியர்கள் கடந்து போவதற்கும் ...மஞ்சள் நிறம் பாகிஸ்தானி மற்றும் எகிப்து ஆட்களுக்கும் ....சிவப்பு நிறம் அரபி ஆட்கள் கடந்து போவதற்கும் நிர்மாணிக்க பட்டுள்ளது.
இது தான் அரபு நாட்டின் வாழ்க்கைன்னு எனக்கு சொன்னது (காலம் காலமா சொல்றதுதான்)இப்போ நானும் சொல்லிகிட்டு இருக்கேன் ,அலுவலகத்தில் உள்ள நம் மனமோ, அத விட்டுட்டோமே (வடை போச்சே), அத மூணு பகுதியா பிரிச்சு, ஊரு கவலை ஒரு பக்கம், ஆபிஸ் கவலை ஒரு பக்கம், தினசரி வாழ்வு கவலை ஒரு பக்கமுன்னு ஓடிகிட்டு இருக்கும் .
சாலை ஒரத்தில் ஒரு வங்கியின் விளம்பரம் பார்த்த போது சட்டென ஒரு ஆச்சரியம் வந்தது. ஆமா!! சரிதான் இல்லே என்று தோன்றியது. அப்படி என்ன. அதன் வாசகம் இதுதான்.
லட்சியம் - மொழி, கலாச்சாரம் வேறுபட்டு இருந்தாலும், ௨00-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்து , ஒற்றுமையாய் வாழ்வதற்கு, தனி மனித லட்சியமே காரணம்.மிக சரி. மாசம் பூராவும் உழைத்து நாம் ஏங்குவதெல்லாம் அந்த சம்பள தினம் எதிர்பார்த்துதானே. கையில் கிடைக்கும் அந்த தருணம் எத்தனை கடினத்தையும் தள்ளி வைக்கும். சம்பளம் பற்றி சொன்னதுமே அடுத்து, ரூபாயின் மதிப்பு பற்றி பேசுவோம்.
ஒரு யூ.ஏ.ஈ.திராம் கொடுத்து நம்ம ஊர் இந்திய பணம் கேட்டால், ரூ.15 ரூபாய் எண்ணிக் கொடுப்பான்.(இந்திய பொருளாதாரம் எங்கே போய்கொண்டிறிகிறது,இங்கு அரசியல் பேச விருப்பமில்லை) இலங்கை ரூ.31/-, பாகிஸ்தான் ரூ.22/-, நேபாளம் ரூ.21/-, பங்களாதேஷ் ரூ.16.75......பிலிப்பைன்ஸ் ரூ.13/- (ஏறத்தாழ...).ஒவ்வொரு நாளும், நரக வேதனையுடன், ஒரு யுகமாக ஓடி, அந்த முப்பதாவது நாளின் முடிவில் சம்பளம் வாங்கும் போது, ஏதோ பெரிய போரில் வெற்றி பெற்றவர்களின் மனநிலையில் இருப்போம் என்பது மட்டும் உறுதி...
இந்த நாணய மதிப்பின் காரணமாகவே, ஆசியாவின் அனைத்து ஏழை நாடுகளை சேர்ந்த மக்கள், இங்கு அடிமை (சொல்லவே மனசு வலிக்குது, ஏறக்குறைய அடிமைதான்...) போல வேலை செய்து, பணம் ஈட்டுகின்றனர்.
பெரும்பாலோர், அதை நல்ல முறையில் சேமித்து, தாய்நாட்டிற்கு அனுப்பினாலும், சிலர், கஷ்டப்பட்டு ஈட்டிய பணத்தை இங்கேயே தொலைக்கும் கதைகளையும் நாங்கள் கண்டதுண்டு..... (அது ஒரு நாற்றம் பிடித்த கதை.... அதை பற்றி, இங்கே பெரிய அளவில் சொல்ல கூட என் மனம் கூசுகிறது.....)...இன்னொரு மனம் பதைபதைக்கும் விஷயம்.... இரண்டு அறை உள்ள ஒரு வீட்டில், இரண்டு குடும்பங்கள் சேர்ந்து வாழ்வது...... சில வீடுகளில் 1 1/2 டாய்லெட் மட்டுமே இருக்கும்.... சில வீடுகளில் ஒரு ஒரு பாத்ரூம் மட்டுமே இருக்கும். ஒரு பொதுவான சமையலறை.... ஒரு பாத்ரூம் இருக்கும் நிலையில், இரு குடும்பங்களுமே அதையே உபயோகிக்க வேண்டி வரும்..... இது ஒரு பெரிய கொடுமை.....இந்த நிலையை நாம் விரும்பாமலேயே ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது.... ஏனெனில், கொடுக்க வேண்டி இருக்கும் மாத வாடகையை மனதில் வைத்து..... மிகைப்படுத்தாமல் சொன்னால், இரண்டு படுக்கை அறையை கொண்ட ஒரு வீடு வாடகை மாதம் ரூ.90,000/- (மிகவும் குறைவாக மதிப்பிட்டால்) என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். இதற்கு கீழும் கிடைக்கும், ரூ.75,000 - ரூ.80,000/- கொடுத்தால் (மிகுந்த வசதி குறைவோடு.....)இந்த விஷம் போல ஏறிய வாடகையை பற்றியும், அதற்கான காரணத்தையும் ஏற்கனவே நாம் பார்த்து விட்டோம்.
வரும் பகுதிகளில் வேறு பல சுவாரசியமான விஷயங்களுடன் சந்திக்கிறேன்.....