முக்கிய செய்திகள்

Tuesday, July 5, 2011

கேள்வி ஞானம்


தத்துவங்கள் / அறிஞர்கள்
கேள்வி ஞானம்
hitler_big
நீங்கள் ஏன் காதுகளை உயர்வாகவும், கண்களைத் தாழ்வாகவும் மதிக்க வேண்டும். {யாகூசான்}
நீங்கள் என்னைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
அப்பொழுது என்னை மதித்திருக்கிறீர்கள்.
ஆனால் இப்பொழுது என்னை நேருக்கு நேர் பார்க்கிறீர்கள்.
ஆனால் என்மேல் கோபமாக இருக்கிறீர்கள்.
அது வளர்ந்து கொண்டே தான் போகிறது என்று நினைக்கிறேன்.
நீங்கள் உங்கள் கண்களைவிட,
ஏன் காதுக்கு அதிக மதிப்பு கொடுக்கிறீர்கள்?
இது மிகவும் அர்த்தமுள்ள கேள்வி.
"உங்கள் கண்கள் உங்களுக்கு 80% அனுபவம் கொடுக்கிறது.
மீதி 20% யை மற்ற 4% புலன்கள் கொடுக்கின்றன.
அதாவது கண்களைத்தவிர மற்ற புலன்கள் ஒவ்வொன்றும் உங்கள் அனுபவத்தில் 5 % அளவு கொடுக்கிறது.
ஆனால் மக்களில் பெரும்பாலோர் காதுகளையே மிகவும் நம்புகின்றனர். கண்களை அல்ல."
நீங்கள் சகல செய்திகளையும் அப்படியே கேட்டு நம்பத் தயாராக இருக்கிறீர்கள்.
அது சரிதானா என்று சிந்திப்பது கூட இல்லை.
அவைகளைச் சரி பார்ப்பதில்லை.
நீங்கள் எந்தப் பொய்யையும் அப்படியே நம்பத் தயாராக இருக்கிறீர்கள்.
யார் அந்த அளவுக்குப் பொறுமையாக சிந்திக்கிறார்கள்?
அதற்கு நேரம் ஏது? மக்கள் பொய்யிலேயே வாழ்கிறார்கள்.
அவர்கள் தங்கள் கண்ணால் பார்க்கக்கூட விரும்பவில்லை.
காதால் கேட்டதை வைத்து அப்படியே நம்பிவிடுகிறார்கள்.
நீங்கள் கடவுளை பார்த்திருக்கிறீர்களா?
ஆனால் இந்த உலகமே அப்படி ஒன்று இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கிறது.
ஏனென்றால் நீங்கள் அதைப் பற்றி கேட்டிருக்கிறீர்கள்.
ஆனால் அப்படிச் சொன்னவர்களிடம் நீங்கள் யாரும் நீங்கள் அவரைப் பார்த்திருக்கிறீர்களா?
என்று கேட்டதாகத் தெரியவில்லை.
ஏனெனில் அவர்களும் அப்படியே கேட்டது தான்!
ஆகவே உங்களுக்கு விடை கிடைக்காது!
கொஞ்சம் தேடிப் பாருங்கள்.
அப்படி கடவுளைப் பார்த்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று!
நீங்கள் கண்டிப்பாக யாரையுமே பார்க்க முடியாது.
பல நூற்றாண்டுகளாக இப்படி கேள்வி ஞானத்தை மட்டும் வைத்து
ஒரு பொய்யை இந்த சமூகம் நம்பிக் கொண்டிருக்கிறது..!
இந்த பொய்யை ஏற்படுத்தியவர்கள் யார்?
- ஓஷோ

No comments:

Post a Comment